2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2022-04-23 20:32 GMT
நெல்லை:
அம்பை அருகே உள்ள கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வேலாயுதம் என்ற வேலுகுட்டி (வயது 26), இசக்கிமுத்து (34). இவர்கள் அடிதடி, கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டதால் இவர்களை அம்பை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் நேற்று வேலாயுதம் என்ற வேலுகுட்டி, இசக்கிமுத்து ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.

மேலும் செய்திகள்