காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை
ராய்ச்சூரில் காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
ராய்ச்சூர்:
ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் புறநகர் பகுதியில் வசித்து வந்தவர் லவ் சர்க்கார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கரீனா. இவர்கள் இருவரும் ஒரே கிராமம் என்பதால் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். பின்னர் அது காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் லவ் சர்க்காரின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் லவ் சர்க்காரை அழைத்து கடுமையாக கண்டித்தனர். மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லவ் சர்க்காருக்கு, வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தனர். ஆனாலும் காதலை கைவிடாத லவ் சர்க்கார், நேற்று முன்தினம் வீட்டைவிட்டு வெளியேறினார்.
பின்னர் தனது காதலி கரீனாவை சந்தித்தார். அதையடுத்து இருவரும் சிந்தனூர் தாலுகா ஆர்.ஹெச்-3 கியாம்ப் அருகே உள்ள ஒரு பண்ணை தோட்டத்தில் அமைந்திருக்கும் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சிந்தனூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.