திறப்பு விழா கண்ட 2 ஆண்டில் புதிய பாலம் இடிப்பு

விருத்தாசலத்தில் திறப்பு விழா கண்ட 2 ஆண்டில் புதிய பாலம் இடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-04-23 20:23 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை இடையே சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்காக செம்பளக்குறிச்சியில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டு திறப்பு விழா கண்ட புதிய பாலத்தையும் இடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாலம் இடிக்கும் பணி நேற்று தொடங்கியது. 
இது பற்றி அறிந்த மக்கள் அதிகாரம் அமைப்பின் கிளை செயலாளர் தனசேகரன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அங்கு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், பாலம் இடிக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

பாதியில் நிறுத்தம் 

அப்போது பாலம் இடிக்கும் பணியில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திறப்பு விழா கண்ட 2 ஆண்டிலேயே இடிப்பதால் அரசு பணம் விரயமாகிறது. ஆகையால் பாலத்தை இடிக்காமல் சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.  இதனால் பாலம் இடிக்கும் பணி பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றனர். இதையடுத்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்