கர்நாடகத்தில் புதிதாக 139 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 139 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-04-23 20:19 GMT
பெங்களூரு:

23 மாவட்டங்களில்...

  கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  கர்நாடகத்தில் நேற்று 10 ஆயிரத்து 118 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 139 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பெங்களூரு நகரில் 132 பேர், சித்ரதுர்காவில் 2 பேர், பெங்களூரு புறநகர், சிக்கமகளூரு, தாவணகெரே, கோலார், ராமநகரில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டனர். 23 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை. நேற்று உயிரிழப்பு எதும் இல்லை.

  இதுவரை 6 கோடியே 58 லட்சத்து 9 ஆயிரத்து 209 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 39 லட்சத்து 46 லட்சத்து 874 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. 40 ஆயிரத்து 57 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். 55 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆனார்கள். 39 லட்சத்து 5 ஆயிரத்து 906 பேர் இதுவரை குணம் அடைந்து உள்ளனர். 1,679 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு 1.37 சதவீதமாக உள்ளது.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

மீண்டும் முகக்கவசம்

  கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு, நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா 4-வது அலை ஏற்பட்டு விட்டதாக மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு உள்ளது. 

கடந்த சில தினங்களாக முகக்கவசத்தை தவிர்த்து வந்த மக்கள் தற்போது மீண்டும் முகக்கவசம் அணிய ஆரம்பித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்