பேச்சுப்போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம்

பேச்சுப்போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம் பிடித்தார்.

Update: 2022-04-23 20:09 GMT
பெரம்பலூர்:
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பெரம்பலூர் மாவட்ட அளவிலான அம்பேத்கர் பற்றிய பல்வேறு தலைப்புகளில் பேச்சுப்போட்டிகள் நடந்து முடிந்தது. இதில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியில் எழுமூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி வர்ஷா முதலிடமும், பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்-2 மாணவி பாரதி 2-ம் இடமும், சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்-1 மாணவி அகல்யா 3-ம் இடமும் பிடித்தனர். கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் கலை கல்லூரியின் பி.ஏ. தமிழ் 2-ம் ஆண்டு மாணவி காருண்யா முதலிடமும், வேப்பந்தட்டை அரசு கலை கல்லூரியின் பி.ஏ. தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவர் அரவிந்தன் 2-ம் இடமும், பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியின் பி.ஏ. வரலாறு 3-ம் ஆண்டு மாணவி கயல்விழி 3-ம் இடமும் பிடித்தனர். சிறப்பு பரிசுக்கு முருக்கன்குடி அரசு உயர்நிலைப்பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி அபிநயாவும், வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி கிருபாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் மற்றும் பாராட்டு சான்றிதழும், மாவட்ட கலெக்டரால் விரைவில் வழங்கப்படவுள்ளது. மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் பங்கேற்றவர்களில், அரசு பள்ளி மாணவ-மாணவிகளில் 2 பேர் தனியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படவுள்ளது என்று தமிழ் வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்