அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது

தாயில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-23 20:00 GMT
தாயில்பட்டி, 
தாயில்பட்டி அருகே உள்ள வெற்றிலையூரணி பகுதியில் வெம்பக்கோட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பெயரில் பிரபு குமார் (வயது 38) என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அனுமதியின்றி வீட்டில் 20 கிலோ சரவெடிகள் தயாரித்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார், பிரபுகுமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்