ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தி சென்றவர் கைது
வாணியம்பாடி அருகே ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்திச்சென்றவர் கைது செய்யப்பட்டார்.;
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்திச்சென்றவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவுப்படி, வேலூர் மண்டல இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் வாணியம்பாடி அருகே வள்ளிப்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த பயணிகள் ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில் 24 மூட்டைகளில் சுமார் 1200 கிலோ ரேஷன் அரிசியை ஆந்திரா மாநிலத்திற்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து வள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சின்னா (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட அரிசி வாணியம்பாடி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.