மது விற்ற முதியவர் கைது
குமாரபுரம் அருகே மது விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.;
பத்மநாபபுரம்:
கொற்றிகோடு சப்-இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று குமாரபுரம் அருகே சாண்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் பகுதியை சேர்ந்த ஆசீர்வாதம் (வயது 60) என்பதும், அந்த பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டதும் ெதரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.