தட்டிக்கேட்டவரை தாக்கிய வாலிபர் கைது
தட்டிக்கேட்டவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
மதுரை,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அம்மா பட்டியை சேர்ந்தவர் அமீர்கான் (வயது 23). இவர் தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலை அருகே அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் செல்போனில் அசிங்கமாகவும் ஆபாசமாகவும் பேசியுள்ளார். இதை அறிந்த அந்த பெண்ணின் தந்தை அந்த வாலிபரை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் அவரையும் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார்.இந்த சம்பவம் குறித்து பெண்ணின் தந்தை தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அமீர்கானை கைது செய்தனர்.