திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோவில் திருவிழா:இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்

திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2022-04-23 18:37 GMT
திருப்பத்தூர், 
திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
மாட்டு வண்டி பந்தயம்
திருப்பத்தூர் பூமாயி அம்மன் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் திருப்பத்தூர்-திருக்கோஷ்டியூர் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 53 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு வண்டி பந்தயம் என 4 பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை நகரம்பட்டி வைத்தியா வண்டியும், 2-வது பரிசை ஆணையூர் செல்வம் வண்டியும், 3-வது பரிசை பொன்பேத்தி மருதுபாண்டிய வல்லாத்தேவர் வண்டியும், 4-வது பரிசை அவனியாபுரம் மோகன் வண்டியும் பெற்றன.
பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை புலிமலைப்பட்டி முனிச்சாமி மற்றும் அவனியாபுரம் முருகன் நகைகடை வண்டியும், 2-வது பரிசை அவனியாபுரம் மோகன் வண்டியும், 3-வது பரிசை சிவகங்கை புதுப்பட்டி இளையராஜா வண்டியும், 4-வது பரிசை சின்னமாங்குளம் மணிமாலா கலையரசன் வண்டியும் பெற்றன.
பரிசுகள்
தொடர்ந்து நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 15 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை மேலூர் அஜிமல்கான் வண்டியும், 2-வது பரிசை தானாவயல் வெங்கடாசலம் வண்டியும், 3-வது பரிசை திருமலை கண்ணன் வண்டியும், 4-வது பரிசை சிவகங்கை அருண் ஸ்டூடியோ வண்டியும் பெற்றன. இறுதியாக நடைபெற்ற பூஞ்சிட்டு வண்டி பந்தயத்தில் 18 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கொட்டானிபட்டி தொட்டிச்சியம்மன் மற்றும் புலிமலைப்பட்டி தர்ஷிகா வண்டியும், 2-வது பரிசை கள்ளந்திரி சிவபிரபு வண்டியும், 3-வது பரிசை விராமதி செல்வமணி வண்டியும், 4-வது பரிசை நெய்வாசல் பெரியசாமி வண்டியும் பெற்றன.. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி இலக்கை நோக்கி ஓடிய மாட்டு வண்டிகளை ஏராளமான பார்வையாளர்கள் கைத்தட்டி உற்சாகத்துடன் வரவேற்றனர்.

மேலும் செய்திகள்