பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-04-23 18:30 GMT
கரூர்
கிருஷ்ணராயபுரம், 
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பிள்ளபாளையம் அரசு ஆதிதிராவிட நல நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். பிள்ளபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவள்ளி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாயனூர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன அலுவலர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் குறித்து பேசினார். பள்ளி மேலாண்மை குழு தலைவராக பிரேமா, துணைத் தலைவராக தனலட்சுமி மற்றும் 15 உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்