குளித்தலை,
குளித்தலை அருகே உள்ள மையிலாடி இரட்டை வாய்க்கால் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் மது விற்ற குளித்தலை அருகே உள்ள சத்தியமங்கலம் டி.வி. நகரை சேர்ந்த வெற்றிவேல் (வயது 45) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 5 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டனர்.
தோகைமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட கொசூர் ஊராட்சி வாழைக்கிணத்து கிராமத்தை சேர்ந்தவர் ராசு பழனிப்பன் என்கிற அண்ணாத்துரை (42). இவர் தனது பெட்டிக்கடையில் வைத்து சட்ட விரோதமாக மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து தோகைமலை போலீசார் அங்கு சென்று அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.