கீழடி அகழாய்வில் கிடைத்த சில்லுவட்டுக்கள்

கீழடி அகழாய்வில் சில்லுவட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டன.;

Update: 2022-04-23 18:07 GMT
திருப்புவனம், 
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் தற்போது 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் அதிகமாக பாசிமணிகள் கிடைத்தன. 
பின்பு யானை தந்தத்தால் ஆன பகடைக்காய் கிடைத்தது. மொத்தம் 5 குழிகளில் நேற்று 4-வது குழியில் சிறுவர்கள், பெண்கள் விளையாடும் சில்லு வட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டன.  மேலும் சிதைந்த நிலையில் பெரிய பானையின் மேல் பாகம் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணி நடைபெறும்போது அதன் உயரம், அகலம் பற்றிய முழுவிவரம் கிடைக்கும். 

மேலும் செய்திகள்