திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி ஒருவர் சாவு

திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தாா்.

Update: 2022-04-23 17:56 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் நேற்று 40 வயதுடைய ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்த திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், செல்வம் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 

  பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக  திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 இறந்து போனது யார் என்பது குறித்து விசாரித்த போது, அவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா லப்பைகுடிகாடு கிராமத்தை சேர்ந்த தீன் முகமது மகன் கரீம்பாஷா (41) என்பது தெரியவந்தது. 


இவர் ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் பணம் வசூலிக்க திருக்கோவிலூர் வந்தபோது ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது தவறி விழுந்து இறந்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்