ஓடும் பஸ்சில் 8 பவுன் நகை மாயம்

ஓடும் பஸ்சில் 8 பவுன் நகை மாயம் மாயமானது

Update: 2022-04-23 17:54 GMT
காரைக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் புதுநிலைப்பட்டியை சேர்த்தவர் முத்துலட்சுமி (வயது 26). இவர் கொட்டாம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின் அங்கிருந்து புதுப்பட்டி திரும்புவதற்காக கொட்டாம்பட்டியில் இருந்து காரைக்குடிக்கு பஸ்சில் வந்துள்ளார். காரைக்குடி புது பஸ் நிலையம் வந்தவுடன் தனது கைப்பையை திறந்துபார்த்துள்ளார். அதில் வைத்திருந்த 8 பவுன் நகைகளை காணவில்லை. அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஓடும் பஸ்சில் மாயமான நகைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்