திருக்கோவிலூர் அருகே லாரி டிரைவர் மீது தாக்குதல் ஊராட்சி செயலாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு

திருக்கோவிலூர் அருகே லாரி டிரைவரை தாக்கிய ஊராட்சி செயலாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-04-23 17:52 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள டி. கொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மகன் குமார் (வயது 46). லாரி டிரைவர். இதே கிராமத்தில் ஊராட்சி செயலாளராக வேலை பார்த்து வருபவர் துரைக்கண்ணு மகன் சரவணன் (40). இவர்களுக்கிடையே முன்விரோதம் உள்ளது.

சம்வத்தன்று குமாரை,  ஊராட்சி செயலர் சரவணன், பிரகாஷ், ரஞ்சித்குமார், தீனதயாளன் மற்றும் வினோத் ஆகியோர் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் பலத்த காயமடைந்த குமார் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இதுகுறித்து குமார் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, சரவணன் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்