மின்சாரம் தாக்கி ஏசி மெக்கானிக் சாவு

விழுப்புரத்தில் மின்சாரம் தாக்கி ஏசி மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-04-23 17:46 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் கிழக்கு செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் துரைசாமி (வயது 32), ஏசி மெக்கானிக். இவர் சம்பவத்தன்று விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளி பின்புறம் உள்ள ஒரு வீட்டில் ஏசியை பழுதுநீக்கும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மேலே சென்ற மின்ஒயரில் அவரது கை பட்டதால் மின்சாரம் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனே அவரை முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்