திருச்செங்கோட்டில் ரூ.3 கோடிக்கு மஞ்சள் ஏலம்
திருச்செங்கோட்டில் ரூ.3 கோடிக்கு மஞ்சள் ஏலம்
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.7,229 முதல் ரூ.9523 வரையிலும், கிழங்கு ரக மஞ்சள் குவிண்டால் ரூ.7,100 முதல் ரூ.8,645 வரையிலும், பனங்காளி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.12,002 முதல் ரூ.18,700 வரையிலும் விற்பனை ஆனது. மொத்தம் 6,500 மூட்டை மஞ்சள் ரூ.3.10 கோடிக்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.