திருப்புவனத்தில் பலத்த மழை

திருப்புவனத்தில் பலத்த மழை பெய்தது.

Update: 2022-04-23 17:33 GMT
திருப்புவனம்,
திருப்புவனம் பகுதியில் நேற்று முன்தினம் காலை சிறிது நேரம் மழை பெய்தது. பின்பு வெயில் கடுமையாக அடித்தது. மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன் பிறகு நேற்று அதிகாலை 1 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. இதனால் கிராமப் பகுதிகளில் சாலைகள், வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. நகர் பகுதியில் ஒரு சில இடங்களில் மழைத்தண்ணீர் தேங்கி குளம் போல் காணப்பட்டது. நேற்று அதிகாலை பெய்த மழையின் அளவு 50.4 மில்லி மீட்டர் ஆகும். இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்