கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-04-23 17:11 GMT
பொறையாறு;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை அருகே வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை உள்ளது. இங்கு உலக மரபு தின விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கட்டணமின்றி அகழ்வைப்பகத்தை கண்டு ரசித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று டேனிஷ் கோட்டையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையொட்டி மேளதாளம், மங்கள வாத்தியங்கள் முழங்க கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து நாடக கலைஞர்களின் கொரோனா குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்தினர். கொரோனாவை உருவாக்கிய எமனை சிவன் மற்றும் பார்வதி ஆகியோர் இணைந்து வதம் செய்வது போன்ற நாடகம் நடைபெற்றது.  இதில் சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்