சயனபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.20 லட்சத்தில் சுற்றுச்சுவர்

சயனபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.20 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்ட பூமி பூைஜ நடந்தது.

Update: 2022-04-23 17:07 GMT
நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சயனபுரம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஊராட்சி நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சுற்று சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு தலைமையில் நடைபெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு கலந்து கொண்டு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுகன்யா ரவி, பள்ளி தலைமை ஆசிரியர் மீனாட்சி சுந்தரம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் விசுவநாதன், முஹம்மது அப்துல் ரஹ்மான், பெருமாள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சதீஷ், அரிக்கிருஷ்ணன், பாரதி, ஒப்பந்ததாரர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்