ரேஷன் அரிசி பறிமுதல்
ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்ற 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;
அரக்கோணம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திருத்தணி ரெயில் நிலையத்தில் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரெயில்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் கருடாத்திரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சோதனை செய்தபோது சுமார் 200 கிலோ ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் ஆந்திர மாநிலம் புத்தூரை சேர்ந்த சந்திரா (வயது 38) என்பவர் மீது அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.