கந்திகுப்பம் அருகே விபத்தில் கட்டிட தொழிலாளி சாவு

கந்திகுப்பம் அருகே விபத்தில் கட்டிட தொழிலாளி இறந்தார்.

Update: 2022-04-23 16:50 GMT
பர்கூர்:
ஓசூர் தோட்டகிரியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 50). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இவர், அந்தேவனப்பள்ளியை சேர்ந்த சீனிவாசன் (38), ஓசூர் குடிசாதனப்பள்ளியை சேர்ந்த பாலப்பா (60) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் கந்திகுப்பம் அருகே வரட்டனப்பள்ளி-குப்பம் சாலையில் பசவன்ன கோவில் பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கீழே கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனிராஜ் பரிதாபமாக இறந்தார். பாலப்பா, சீனிவாசன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்