ஊத்தங்கரையில் பாட புத்தகங்கள் மாயமானது தொடர்பாக 8 பேருக்கு போலீஸ் சம்மன்

ஊத்தங்கரையில் பாட புத்தகங்கள் மாயமானது தொடர்பாக 8 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

Update: 2022-04-23 16:50 GMT
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலக மைய அலுவலகத்தில் இருந்து ரூ. 8 லட்சம் மதிப்பிலான, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான சுமார் 12 ஆயிரம் பாட புத்தகங்கள் மாயமானது. இதுகுறித்து விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி அங்கு பணியில் இருந்த உதவியாளர் தங்கவேல், கிளர்க் திருநாவுக்கரசு ஆகிய 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். பாட புத்தகங்கள் மாயமானது தொடர்பாக ஊத்தங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் அலுவலகத்தில் ஏற்கெனவே பணிபுரிந்த மற்றும் தற்போது பணிபுரிந்து வரும் வட்டார கல்வி அலுவலர் மற்றும் பணியாளர்கள் உள்பட 8 பேருக்கு போலீசார் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர். விசாரணைக்கு பிறகு அரசு பள்ளி பாட புத்தகங்கள் யாருக்கு எங்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்