ஊத்தங்கரை அருகே நிலத்தகராறில் இருதரப்பினர் மோதல்: 4 பேர் மீது வழக்கு
ஊத்தங்கரை அருகே நிலத்தகராறில் இருதரப்பினர் மோதல் தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே உள்ள நாப்பிராம்பட்டியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 60). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ராஜாராம் (35). உறவினர்களான இவர்களுக்குள் நிலத்தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரும் மோதி கொண்டனர். இதுதொடர்பான புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் சுந்தரம், ராஜாராம், கவுரி (30), சீனிவாசன் (65) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.