தர்மபுரி அரசு மகளிர் பள்ளியில் கழிவறைக்கு குடங்களில் தண்ணீர் எடுத்து சென்ற மாணவிகள்

தர்மபுரி அரசு மகளிர் பள்ளியில் கழிவறைக்கு மாணவிகள்குடங்களில் தண்ணீர் எடுத்து சென்றனர்.;

Update: 2022-04-23 16:49 GMT
தர்மபுரி:
தர்மபுரி இலக்கியம்பட்டியில் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் உள்ள கழிவறைகளுக்கு மாணவிகள் குடங்களில் தண்ணீரை எடுத்து செல்லும் வீடியோ சமூக வலை தளங்களில் வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளியில் உள்ள மின்மோட்டார் பழுதடைந்ததால் மாணவிகள் பயன்படுத்துவதற்கான தண்ணீரை குடங்களில் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்