காரிமங்கலம் அருகே சூதாடிய 8 பேர் கைது

காரிமங்கலம் அருகே சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-04-23 16:49 GMT
காரிமங்கலம் :
காரிமங்கலம் அருகே பொம்மள்ளி என்ற கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள வெங்கேடசன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் ஒரு கும்பல் சட்டவிரோதமாக இரவு நேரங்களில் லங்கர் கட்டை சூதாட்டம் ஆடுவதாக காரிமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு நேரில் சென்ற பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு தினகரன் மற்றும் காரிமங்கலம் போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த வெங்கடேசன் (வயது 45), ராஜசேகர் (40), வேலன் (44), சிவா (40), ஜீனிஸ் (27), ரமேஷ் (31), முதர்சீர் (27), மாரியப்பன் (37) ஆகிய 8 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,100 ரூபாய், 3 லங்கர் கட்டைகள், டப்பாவை காரிமங்கலம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்