வாலாஜா
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா போலீசார் வாலாஜா அணைக்கட்டு ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் திரிந்து கொண்டிருந்த வாலிபரை மடக்கி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் குடிமல்லூர் அணைக்கட்டு ரோடு பழைய காலனியை சேர்ந்த ஜெகதீசன் (வயது 21) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.