தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் படுகாயம்

நாகூர் அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2022-04-23 16:37 GMT
நாகூர்:
நாகூர் அருகே முட்டம் கீழத்தெருவை சேர்ந்த தனபதி என்பவர் தொகுப்பு வீட்டில் வசித்து வந்தார். இந்த வீடு பழுதடைந்திருந்ததால் கடந்த 4 ஆண்டுகளாக அந்த வீட்டை பூட்டி விட்டு, அதன் அருகே தகர கொட்டகை அமைத்து அதில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர், பழுதடைந்த வீட்டை இடிக்கும் பணியில் நேற்று காலை ஈடுபட்டார். இந்த பணியில் நரிமணம் கீழத்தெருவை சேர்ந்த அழகுமூர்த்தி (வயது60), அய்யாக்கண்ணு (58), உத்தமசோழபுரத்தை சேர்ந்த சிங்காரவேல் (52) ஆகிய 3 பேர் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் மேற்கூரை இடிந்து அவர்கள் 3 பேர் மீது விழுந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம்  நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்