ஆனைமலை அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
ஆனைமலை அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஆனைமலை
ஆனைமலை அருகே உள்ள வாழைகொம்பு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். தனியார் பஸ் டிரைவர். இவருடைய மனைவி யசோதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று ஆனந்தகுமார் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த யசோதா திடீரென வீட்டில் அருகே உள்ள கிணற்றில் குதித்தார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் விரைந்து வந்த வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி யசோதாவை பிணமாக மீட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் ஆனைமலை போலீசார் அங்கு சென்று, யசோதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.