கட்டுரை போட்டியில் வெற்றி வால்பாறை அரசு கல்லூரி மாணவருக்கு சான்றிதழ்
கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற வால்பாறை அரசு கல்லூரி மாணவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
வால்பாறை
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கான கட்டுரை போட்டி நடைபெற்றது. இதில், வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர் ராகுல் 2-ம் இடம் பெற்றார். இதைத்தொடர்ந்து மாணவர் ராகுலை வால்பாறை அரசு கல்லூரி முதல்வர் செல்வமுத்துக்குமாரசாமி சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் அவருக்கு பேராசிரியர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.