தர்மபுரி அருகே 2 மாத பெண் குழந்தை திடீர் சாவு-போலீசார் விசாரணை

தர்மபுரி அருகே 2 மாத பெண் குழந்தை திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2022-04-23 14:45 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் அருகே உள்ள மேல் ஆண்டிஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சக்தி (வயது 30), தொழிலாளி. இவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2-வது பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தர்மபுரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குழந்தையுடன் வீட்டுக்கு சென்றனர். இந்த நிலையில் குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெண் குழந்தை உயிரிழந்தது. இதுபற்றி தகவல் அறிந்த கிருஷ்ணாபுரம் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் திடீர் சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்