ஆபத்தான பாலம் சீரமைக்கப்படுமா?

திருத்துறைப்பூண்டி அருகே ஆபத்தான பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-04-23 14:40 GMT
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே ஆபத்தான பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
முல்லை ஆற்றின் குறுக்கே பாலம் 
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் ஊராட்சியில்  விட்டுகட்டி உள்ளது. இந்த பகுதியில் இருந்து மடப்புரம் செல்வதற்கு வசதியாகவும்,  திருத்துறைப்பூண்டி செல்வதற்கு வசதியாகவும் முல்லை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. 
இந்த பாலத்தை அந்த பகுதியை சேர்ந்த முதியவர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் பல்வேறு இடங்களுக்கு செல்வதற்காக தினமும் பயன்படுத்தி வருகின்றனர். 
சீரமைத்து தர வேண்டும் 
தற்ேபாது இந்த பாலத்தின் கைப்பிடிகள் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள் விபத்து ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் உள்ளனர். வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் பாலம் வழியாக செல்லும் போது முல்லை ஆற்றில் விழும் அபாயம் உள்ளது. 
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருத்துறைப்பூண்டி அருகே உடைந்து காணப்படும் பாலத்தின் கைப்பிடிகளை சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
--


மேலும் செய்திகள்