பொதுமக்கள் தகவல் கொடுத்தும் வன ஊழியர்கள் அலட்சியம்
பொதுமக்கள் தகவல் கொடுத்தும் வன ஊழியர்கள் அலட்சியம்
கூடலூர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓவேலி பேரூராட்சி சூண்டி பகுதியில் துப்பாக்கியால் சுட்டு காட்டெருமை வேட்டையாடப்பட்டது. பின்னர் புதைக்கப்பட்ட காட்டெருமையின் உடற்பாகங்கள் முதுமலை புலிகள் காப்பக மோப்ப நாய் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அதை கைப்பற்றி ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் உள்ள ஆய்வகத்துக்கு வனத்துறையினர் அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணை குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இரவில் துப்பாக்கியால் சுட்டு காட்டெருமை வேட்டையாடப்பட்டு உள்ளது. இந்த சத்தம் கேட்டு பொதுமக்கள், வன ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல், அவர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர்.
இது தொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை பிடிக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.