பந்தலூர்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள ஒரு கிராமத்ைத சேர்ந்தவர் ஜீவகன்(வயது 21). இவர், 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்நாடகா மாநிலத்துக்கு கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர், சேரம்பாடி ேபாலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சிறுமியை கடத்திய ஜீவகனை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டனர்.