புதர் செடிகள் வெட்டி அகற்றம்

புதர் செடிகள் வெட்டி அகற்றம்

Update: 2022-04-23 13:41 GMT
கோத்தகிரி

கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் சுமார் 65 ஆண்டுகள் பழமையான அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்து உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த சில மாதங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பள்ளி வளாகம் முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து இருந்தது. மேலும் காட்டெருமைகள் மற்றும் காட்டுப்பன்றிகளின் புகலிடமாக மாறி இருந்தது.  

இதனால் ஆசிரியர்களும், மாணவ-மாணவிகளும் அச்சம் அடைந்தனர். இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் சார்பில் வளாகத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த புதர் செடிகளை வெட்டி அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று பள்ளி வளாகம் முழுவதும் வளர்ந்திருந்த புதர் செடிகளை வெட்டி அகற்றும் பணி நடைபெற்றது. இதனால் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் நிம்மதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்