கோத்தகிரி
கோத்தகிரி லாங்வுட் சோலை சுற்றுச்சூழல் மையத்தில் உலக புவி தின கருத்தரங்கு மற்றும் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு வனவர் தனபாலன் தலைமை தாங்கினார். வனவர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். லாங்வுட் சோலை பாதுகாப்பு குழு தலைவர் கே.ஜே.ராஜூ பேசும்போது, முன்னோர்கள் நமக்கு கொடுத்த பூமியை ஆபத்து இல்லாமல் இளைய தலைமுறைக்கு கொடுக்க வேண்டியது நமது கடமை என்று தெரிவித்தார். அக்கறை அறக்கட்டளை வட்டார கள அலுவலர் வினோபாப் கூறுகையில், காலநிலை மாற்றத்தால் நீலகிரியில் பனிக்காலம் மிகவும் சுருங்கிவிட்டது என்றார்.
மெட்ராஸ் கிறிஸ்தவ சமூக கல்லூரி முதல்வர் லெனின், பிளாஸ்டிக்கால் ஏற்பட்டு உள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பேசினார். இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட தொழிற்பயிற்சி கல்லூரி மாணவிகள் லாங்வுட் சோலையில் சோலை மர நாற்றுக்கள் மற்றும் மழை நீரை சேகரிக்கும் வகையில் புற்களை நடவு செய்தனர். மேலும் அந்நிய களைச்செடிகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுதல் போன்ற களப்பணிகளை மேற்கொண்டனர். முன்னதாக சந்திரசேகர் வரவேற்றார். முடிவில் வனப்பணியாளர் மூர்த்தி நன்றி கூறினார்.