சதுப்பு நிலத்தில் சிக்கிய குப்பை லாரி

சதுப்பு நிலத்தில் சிக்கிய குப்பை லாரி

Update: 2022-04-23 13:41 GMT
கோத்தகிரி

கோத்தகிரி பேரூராட்சியில் 21 வார்டுகளில் உள்ள குடியிருப்புகளுக்கு தினமும் தூய்மை காவலர்கள் நேரில் சென்று மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து லாரிகள் மூலம் வளம் மீட்பு பூங்காவுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்தநிலையில் இன்று காலையில் காளவாய் பகுதியில் குப்பைகளை ஏற்ற குறுகிய கான்கிரீட் சாலை வழியாக லாரி சென்றது. ஒருபுறமும் மற்றொரு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால், லாரியை டிரைவர் சாலையோரமாக இயக்கினார். 

அப்போது திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த சதுப்பு நிலத்தில் இறங்கியது. சக்கரங்கள் சிக்கியதால், டிரைவரால் லாரியை வெளியே கொண்டு வர முடியவில்லை. பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, லாரி மீட்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று கோத்தகிரி வழியாக கவர்னர் ஊட்டிக்கு செல்ல இருந்ததால், கோத்தகிரி நகர் முழுவதும் தீவிர தூய்மை பணி நடந்தது. 

மேலும் செய்திகள்