விதை விற்பனை நிலையங்களில் அதிகாரி ஆய்வு
திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூரில் விதை விற்பனை நிலையங்களில் அதிகாரி ஆய்வு செய்தார்.;
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மற்றும் கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குனர் சுப்பையா ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது விதை விற்பனை நிலையங்களில் பராமரிக்கப்படும் விதை இருப்பு பதிவேடு, விதைகளின் ஆவணங்கள், விலைப்பட்டியல், பில் புத்தகம், பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் விதை ஆய்வாளர்கள் மற்றும் விதைச்சான்று அலுவலர்களுக்கு தொழில் நுட்பங்கள் மற்றும் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகளின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தினார்.
விவசாயிகள் விதை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகளை வாங்குமாறும், சான்று விதைகள் அதிக மகசூலை தருவதால் அவற்றை பயன்படுத்துமாறும் கேட்டு கொண்டார். ஆய்வின்போது வேலூர் விதை ஆய்வு துணை இயக்குனர் சோமு, ஆரணி விதை ஆய்வாளர் நடராஜன், திருவண்ணாமலை விதை ஆய்வாளர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.