தி.மு.க. கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு

வேலூரில் தி.மு.க. கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-04-23 13:23 GMT
வேலூர்

சென்னையைச் சேர்ந்தவர் வாசன். இவருக்கு சொந்தமான வீடு ஒன்று சத்துவாச்சாரியில் உள்ளது. அந்த வீட்டில் தற்போது வேலூர் மாநகராட்சியில் 27-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ள சதீஷ்குமாரின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் அந்த வீட்டுக்கு சரியான முறையில் அவர்கள் வாடகை கொடுக்கவில்லை எனக் தெரிகிறது. நேற்று முன்தினம் வாசன் தனது தரப்பினருடன் சதீஷ்குமாரின் வீட்டுக்கு வாடகை கேட்க சென்றுள்ளார்.

அப்போது சதீஷ்குமார் தரப்பினர்  வாசன் தரப்பினரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் வாசன் தரப்பைச் சேர்ந்த கண்ணன் உள்பட சிலர் காயம் அடைந்தனர்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து வாசன் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கருணாரன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து சதீஷ்குமார் அவரது அக்காள் கனிமொழி, தாயார் பத்மாவதி உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்