பாலாற்று தடுப்பணையில் இருந்து 2 அடி உயர சாமி சிலை கண்டெடுப்பு

பாலாற்று தடுப்பணையில் இருந்து 2 அடி உயர சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.

Update: 2022-04-23 12:03 GMT
வாலாஜாபாத், 

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் பாலாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இங்கு ஏராளமானோர் வலைகளை வீசி மீன்பிடித்து வருகின்றனர். அவ்வாறு மீன் பிடிக்கும்போது ஏதோ காலில் தட்டுபட அதை எடுத்து பார்த்தனர். அப்போது அது கல்லாலான சாமி சிலை என்பது தெரியவந்தது. 

இது குறித்து பழையசீவரம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர், மற்றும் வாலாஜாபாத் தாலுகா தாசில்தார் லோகநாதன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று 2 அடி உயர சாமி சிலையை கைப்பற்றி வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர். 

2 அடி உயரமுள்ள கற்சிலை, குதிரை வாகனத்துடன் கைகளில் தாமரை மொட்டு வைத்துள்ள சந்திர பகவான் சிலை என்றும், சிலையை சோதனை செய்து பார்த்த பிறகே பழமையான சிலை தானா என்றும், எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்று கண்டறிய முடியும் என வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய தலைவர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்