குடும்பத்தகராறில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
குன்றத்தூர் அருகே குடும்பத்தகராறில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்த கொண்டார்.;
பூந்தமல்லி,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த ஆண்டாங்குப்பம், மேத்தா நகர் பகுதியில் வசித்து வந்தவர் சீனிவாசன் (வயது 41). காவலாளியாக வேலை செய்து வந்தார். இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரீட்டா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை. இந்த நிலையில் சீனிவாசன் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த சீனிவாசன் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.