மொபட்டுகள் மோதலில் முதியவர் பலி
தெள்ளார் அருகே மொட்டுகள் மோதலில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.;
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சேனல் அஸ்தினாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 80). இவர் தனது மனைவி நாகம்மாளுடன் (70) மொபட்டில் தெள்ளாருக்கு சென்று கொண்டிருந்தார்.
தெள்ளார் அருகே சென்ற போது அந்த வழியாக எதிரே அதே கிராமத்தை சேர்ந்த தேவதாஸ் (52) என்பவர் ஓட்டி வந்த மொபட்டும், தம்பதி சென்ற மொபட்டும் நேருக்கு நேர் மோதி கொண்டன.
அதில் ரங்கநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாகம்மாள், தேவதாஸ் ஆகியோர் காயம் அடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அதில் தேவதாஸ் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் தெள்ளார் போலீசார் வழக்குப்பதிவு செயது விசாரணை நடத்தி வருகின்றனர்.