கூட்டுக்கொள்ளையில் ஈடுபட முயன்ற 4 பேர் கைது
கூட்டுக்கொள்ளையில் ஈடுபட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை-திருக்கோவிலூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள முட்புதரில் சந்தேகப்படும் வகையில் இருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், திருவண்ணாமலை பல்லவன் நகரை சேர்ந்த சூர்யா (வயது 26), தீபராஜ் (28), சாரோன் பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (28), சேரியந்தல் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (21) என்பம், அவர்கள் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.