மெட்ரோ ரெயிலில் பயணித்த 30 பேருக்கு குலுக்கல் முறையில் பரிசு

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்த 30 பேருக்கு குலுக்கல் முறையில் பரிசு பொருட்கள், பரிசு கூப்பன் விரைவில் வழங்கப்படும் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

Update: 2022-04-23 05:54 GMT
சென்னை, 

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசு கூப்பன் அல்லது பரிசு பொருட்கள் வழங்கப்படும் என ஏற்கனவே சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த பயணிகளுக்கான மாதாந்திர அதிர்ஷ்ட குலுக்கல் நேற்று கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடந்தது.

இந்த குலுக்கலில் 30 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த 30 பேருக்கும் மார்க் மெட்ரோ சார்பாக பரிசு பொருட்கள், பரிசு கூப்பன் விரைவில் வழங்கப்படும் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுபோன்ற திட்டங்கள் பயணிகளை ஊக்குவிக்கவும், சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிகள் தங்களது பயணத்தை தொடர்ந்து பயணிக்க அடுத்த மாதமும் தொடரும் எனவும், அடுத்த மாதத்துக்கான குலுக்கல் மே 21-ந்தேதி நடைபெறும் எனவும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்