தொழில் அதிபர் வீட்டில் ரூ.8 லட்சம் தங்க-வைர நகை திருட்டு

தொழில் அதிபர் வீட்டில் ரூ.8 லட்சம் தங்க-வைர நகை திருட்டு: வேலைக்கார பெண் கைது.

Update: 2022-04-23 00:16 GMT
சென்னை,

சென்னை ஆழ்வார்பேட்டை, ஸ்ரீராம் காலனியில் வசிப்பவர் கருப்பையா. தொழில் அதிபரான இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்க-வைர நகைகள் திருட்டு போய்விட்டது. இதில் வைரம் மட்டும் ரூ.3 லட்சம் மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அபிராமபுரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

உதவி கமிஷனர் சுப்பிரமணியன் மேற்பார்வையில், அபிராமபுரம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், தொழில் அதிபர் கருப்பையா வீட்டில் வேலை செய்த தனலட்சுமி (வயது 26) என்ற பெண் மேற்படி தங்க, வைர நகைகளை பீரோவில் இருந்து திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. தனலட்சுமி கைது செய்யப்பட்டார். வைரத்தை மட்டும் அடகு வைத்து பணமாக்கி உள்ளார். நகைகளை விற்று விட்டு, புதிதாக நகைகளை வாங்கி தானும் அணிந்துள்ளார். தனது கணவருக்கும் பரிசாக 3 பவுனில் தங்க சங்கிலி வாங்கி போட்டு அழகு பார்த்துள்ளார். தங்க-வைர நகைகள் மீட்கப்பட்டது.

இதே ேபால் துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த மெர்வின் தாமஸ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், பீேராவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.25 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்