சிறப்பிடம் பெற்ற கல்லூரி மாணவிக்கு பாராட்டு

மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கல்லூரி மாணவிக்கு பாராட்டு;

Update: 2022-04-21 18:01 GMT
வேதாரண்யம்:
வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் இலக்கியம் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வரும் சுகன்யா, அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நாகையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார். அவருக்கு கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முருகன் தலைமை தாங்கினார். இதில், தமிழ்த்துறைத் தலைவர் அர்ச்சுணன் மற்றும் பேராசிரியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவியை பாராட்டினர்.

மேலும் செய்திகள்