பஞ்சமுக ஆத்ம ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
அகரம் பேரூராட்சி சுக்காம்பட்டியில் பஞ்சமுக ஆத்ம ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திண்டுக்கல் :
பஞ்சமுக ஆத்ம ஆஞ்சநேயர்
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பை அடுத்த அகரம் பேரூராட்சி சுக்காம்பட்டியில் ஸ்ரீலஸ்ரீ சித்தர் சுவாமிகள் மேற்பார்வையில் விசாலாட்சி அம்மன் சமேத வாஸ்தீஸ்வரர் சுவாமி கோவில் மற்றும் மகா பெரியவர் தியான மண்டபம் கட்டப்பட்டு உள்ளன.
அதன் அருகில் பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீகருடாழ்வார் கோவில்கள் புதிதாக கட்டப்பட்டன. இந்த கோவில்களின் கும்பாபிஷேக விழா ஸ்ரீலஸ்ரீ சித்தர் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை அரவிந்த் பட்டாச்சாரியார் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடந்தது. விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி யாகசாலை முதல் கால பூஜை போன்றவை நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. இதன் பின்னர் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
இதைத்தொடர்ந்து பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், சென்னை வட்டார போக்குவரத்து அலுவலர் ஸ்ரீதர், ஆடிட்டர் ரமணன், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராஜசேகர், அகரம் பேரூர் கழக அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் பேரூராட்சித் தலைவருமான அகரம் சக்திவேல், தொழிலதிபர் எல்.மூர்த்தி, அகரம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் திருமால்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.