அம்பேத்கர் உருவப்படத்துக்கு ஜான் பாண்டியன் மரியாதை

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு ஜான் பாண்டியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Update: 2022-04-14 20:32 GMT
நெல்லை:
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரில் உள்ள த.ம.மு.க. தென் தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டது. அங்கு த.ம.மு.க. நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், மாநில மகளிர் அணி செயலாளர் நளினி சாந்தகுமாரி, நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், மாவட்ட செயலாளர் நாகராஜ சோழன், இளைஞர் அணி செயலாளர் கிங் தேவேந்திரன், மாநகர இளைஞர் அணி செயலாளர் முத்துப்பாண்டி, மகளிர் அணி செயலாளர் வசந்தி, பாலம்மாள் மற்றும் நிர்வாகிகள் ஆதிபாண்டியன், தங்கராஜ் பாண்டியன், யாபேஸ்பாண்டியன், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்