கிறிஸ்தவ ஆலயங்களில் முதியோர் பாதம் கழுவும் நிகழ்ச்சி

தவக்காலம் நிறைவையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் முதியோர் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-04-14 20:28 GMT
நெல்லை:
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நிகழ்வையொட்டி ஆண்டு தோறும் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் மேற்கொள்வார்கள். இதில் பெரிய வியாழன் அன்று ஏசு கிறிஸ்து குருத்துவத்தையும், நற்கருணையையும் ஏற்படுத்தியதை நினைவு கூறப்படுகிறது. இந்த நாளிலே ஏசு தம் சீடர்களின் பாதங்களை கழுவியதையும் நினைவு கூரப்படுகிறது.
இந்த ஆண்டு தவக்காலத்தின் நிறைவையொட்டி நேற்று பெரிய வியாழன் கடைபிடிக்கப்பட்டது. பாளையங்கோட்டை தெற்கு பஜார் சவேரியார் பேராலயத்தில் கத்தோலிக்க பிஷப் அந்தோணிசாமி தலைமையில் இறைவார்த்தை வழிபாடு, பாதம் கழுவும் சடங்கு, நற்கருணை வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் பேராலய அருட்தந்தையர் ராஜேஷ், சதீஸ் செல்வதயாளன், அந்தோணிராஜ், பிஷப்பின் செயலர் மிக்கேல் பிரகாசம் மற்றும் இறைமக்கள் கலந்து கொண்டனர். இதே போல் கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று மாலை தொடங்கி நள்ளிரவு வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாளையொட்டி புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஏசு உயிர்த்தெழுந்த நாளையொட்டி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மேலும் செய்திகள்